தேசிய செய்திகள் ,
ஒசு சல புத்தளம் கிளைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
Posted by
Puththelil
Published on
Saturday, February 23, 2019
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் தள வைத்தியசாலை வளாகத்தில் ஒசு சல புத்தளம் கிளைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஏ.ஆர். ஜவ்ஸிக் தலைமையில் இடம் பெற்ற இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சுகாதார, போசணைகள், சுதேச மருத்துவ துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார். சுகாதார, போசணை மற்றும் உள்ளூர் வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், வடமேல் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் என். பரீத், ஒசு சல நிறுவனத்தின் அதிகாரிகள், புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வைத்தியசாலை வைத்தியர்கள் வைத்திய தேவைகள் குறித்து தமது கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர். வைத்தியசாலை அபிவிருத்தி குழு செயளாலர் எச்.எம்.எம். சபீக் வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் வைத்தியசாலை தரம் உயர்த்துவது தொடர்பான மகஜர் ஓன்றையும் அமைச்சரிடம் கையளித்தார்

1 comments
Readers Comments

February 24, 2019 at 9:58 PM
நற்பணி தொடரட்டும்