தேசிய செய்திகள் ,
புத்தளம் வைத்தியசாலைக்கு பொருட்கள் அன்பளிப்பு
Posted by
Puththelil
Published on
Tuesday, February 19, 2019
( நமாஸ், முஸ்பிக் )
புத்தளத்தில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உபகாரணங்களை புத்தளம் தள வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.
புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஏ.ஆர். ஜவ்ஸிக் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வின் போது இந்த உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
வடமேல் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் என். பரீத், புத்தளத்தில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் சார்பாக இந்த அன்பளிப்பை ஏற்பாடு செய்த இணைப்பாளர் ஐ.எம். முஜிபர், புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் எச்.எம்.எம். ஷபீக் உட்பட அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், வைத்தியர்கள், தாதிமார் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வைத்தியசாலை வார்ட்களுக்கு தேவையான அலுமாரிகள், கதிரைகள், இறாக்கைகள், சலவை இயந்திரம், மின் விசிறிகள், குளிரூட்டிகள் உட்பட பல்வேறு உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்ட பொருட்களில் அடங்கி இருந்தன.
வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட உபகரணங்கள் வைத்தியசாலையிலுள்ள 24 வார்ட்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

0 comments
Readers Comments