Photo Gallery ,
யாழ். பல்கலைக்கழக பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்
Posted by
Puththelil
Published on
Sunday, July 1, 2018
( அப்துல் நமாஸ் )
யாழ்ப்பாண பல்கலைக்கழக 1987 கல்வி ஆண்டு மாணவர்களின் ஒன்றுகூடல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றது. மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒன்று கூடலின் பிரதான நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் பழைய மாணவர் குழு தலைவர் யாழ். பல்கலைக்கழக விளையாட்டுத்துறை விரிவுரையாளர் எம். இளம்பிறையன் தலைமையில் நேற்று இடம் பெற்றது.
கொழும்பு, புத்தளம், அம்பாறை, திருகோணமலை, வவுனியா மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பழைய மாணவர்கள் இந்த ஒன்று கூடலில் கலந்து கொண்டனர். அவுஸ்திரேலியா, கெனடா, நிவ்ஸ்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழ்ந்துவரும் பழைய மாணவர்களும் இந்த ஒன்று கூடலில் கலந்து கொண்டது விசேட அம்சமாகும்.
1987ஆம் கல்வி ஆண்டு மாணவர்களுக்கு கல்வி போதித்த விரிவுரையாளர்கள் இந்த நிகழ்வின் போது மாணவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். யாழ். பல்கலைக்கழகத்தில் பழைய மாணவர் ஒன்று கூடலொன்று இடம் பெற்றது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

1 comments
Readers Comments

July 2, 2018 at 2:22 PM
மகிழ்ச்சி