நிகழ்வுகள் ,
யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் கலந்துரையாடல்
Posted by
Puththelil
Published on
Tuesday, July 3, 2018
( அப்துல் நமாஸ் )
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 1987 கல்வி ஆண்டு முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக நடப்பாண்டு முஸ்லிம் மஜ்லிஸ் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலான சிநேக பூர்வ கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணம் பெரிய பள்ளியில் இடம் பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 1987 கல்வி ஆண்டு முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்திருந்தது. .
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 1987 கல்வி ஆண்டு பழைய மாணவரும் தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான காலாநிதி ஏ.ஏ.எம். நுபைல் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம் பெற்றது. யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் எஸ்.எச்.எம். முனீர் தலைமையில் முகாமைத்துவம், சட்டம், கலை, விஞ்ஞானம் உட்பட ஏனைய பீடங்களைச் சேர்ந்த முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
கல்வி நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது. யாழ். பலகலைக்கழகத்தில் சகல பீடங்களிலும் தற்போது 843 முஸ்லிம் மாணவ, மாணவிகள் கல்வி தமது கல்வியை தொடர்கின்றனர்.

0 comments
Readers Comments