<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

உப அதிபர் தாக்கப்பட்டதை கண்டித்து பெற்றோர் ஆர்ப்பாட்டம்

( மதுரங்குளி செய்தியாளர் )
புளுதிவயல் முஸ்லிம் வித்தியாலய உப அதிபர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், உப அதிபரை தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி இரண்டாவது நாளாகவும் இன்றைய தினம்  பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புளுதிவயல் வித்தியாலய மாணவர்கள்  கடந்த திங்கட்கிழமை
இரவு சுற்றுலா சென்று பாடசாலைக்கு திரும்பி வந்துள்ளனர். அந்த மாணவர்களை பாடசாலைக்கு முன்னாலுள்ள பாதசாரி கடவையில் உப அதிபர் கடக்க வைத்துக் கொண்டிருந்த சமயம் அந்த வீதியால்  வாகனத்தில் வந்த குறித்த நபர் தனது வாகனத்தை நிறுத்தியதற்காக  உப அதிபரை  தாக்கியுள்ளார்

அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் புளுதிவயல் முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர்கள் சுகவீன விடுமுறையை வழங்கி தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது எதிர்ப்பைத் தெரிவித்ததோடு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் வருகை தந்தனர். உப அதிபரை தாக்கிய நபரை சீக்கிரமே கைது செய்வதாக புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்தார். ஒரு வாரத்திற்குள் குறித்த நபரை கைது செய்யது போனால் பெற்றோருடன் சேர்ந்து பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள்  நானும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக மாகாண சபை உறுப்பினர் நியாஸ் தெரிவித்தார். 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors