<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் வைத்தியசாலைக்கு 1250 படுக்கைகளைக் கொண்ட புதிய கட்டிடத் தொகுதிகள்

( அப்துல்  நமாஸ் )
(  படங்கள் முஸ்பிக் )
1250 படுக்கைகளைக் கொண்ட ஆறு மாடிகளைக் கொண்ட நான்கு புதிய கட்டடடத் தொகுதிகள் புத்தளம் தள  வைத்தியசாலையில்  அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் பூர்த்தி அடையும் நிலையில் உள்ளன. இந்த புதிய வைத்தியசாலை தொகுதி  சுவீடன் நாட்டிலிருந்து எமது நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ள  250 மில்லியன் யூரோ நிதியிலிருந்து நிர்மாணிக்கப்படும்.   புதிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஸல் காஸிம்   தெரிவித்தார்.

புத்தளம் வைத்தியசாலையின்    தேவைகள் மற்றும்  குறைபாடுகள் தொடர்பாக  கேட்டறிந்து அவற்றினை நிவர்த்தி செய்யும் நோக்கில் பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் நேற்று  ( சனிக்கழமை ) புத்தளம் தள  வைத்தியசாலைக்கு விஜயம் மேற் கொண்டார். புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் மேற் கொண்ட பிரதி அமைச்சர் முதலில் வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக வைத்தியசாலை   நிர்வாகத்திடம் கேட்டறிந்து கொண்டார். அதன் பின்பு புத்தளம் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற் கூறியவாறு தெரிவித்தார்.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன  புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ்,  உப தலைவர் உட்பட உறுப்பினர்கள், பிரதி சுகாதார சேவைகள் திட்டமிடல்  பணிப்பாளர் ஸ்ரீதரன், சுகாதார அமைச்சின் அதிகாரி வைத்தியர் அசோக் பெரேரா, வடமேல் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் என். பரீத், புத்தளம் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்தி குழு செயலாளரும் புத்தளம் நகர சபை நிர்வாக  அதிகாரியுமான எச்.எம்.எம். சபீக் உட்பட அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்,  வைத்தியசாலை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர் பைஸல் காஸிம்

1250 படுக்கைகளைக் கொண்டு அமைக்கப்படவுள்ள புதிய வைத்தியசாலை கட்டிடத் தொகுதியில் அதி தேவைகள்  பிரிவில்  (HDU )  100 படுக்கைகளும், அவசர சிகிச்சைப் பிரிவில் 16 படுக்கைகளும் ஆரம்ப சிகிச்சை சேவை பிரிவில் 20 படுக்கைகளும் குழந்தை பெறுபேறு பிரிவில் 30 படுக்கைகளும் கொண்ட வார்ட்கள் அமையப் பெறும். அத்துடம் மத குருமாருக்கான வார்ட் ஒன்றும் கட்டணம் செலுத்தி தங்கி சிச்சைப் பெரும் வார்ட் ஒன்றும் இந்த தொகுதியில் அமைக்கப்படும்     

குறைந்தது 25 வருடங்களுக்காவது பயன் பெறுமாறு பூரண வசதிகளுடன் கொண்ட  வைத்தியசாலையாக  அமைய வேண்டும் என்பதே எனது ஆசையாகும். அத்துடன்   என்னுடைய காலத்திலேயே இந்த பணியை  செய்து முடிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றேன்.   

அதேவேளை புத்தளம் தள வைத்தியசாலைக்கு தேவையான ஆளணி மற்றும்  வைத்தியசாலைக்குத் தேவையான உபகரணங்களையும் இந்த வருடத்திற்குள் வழங்கவுள்ளோம்.  புத்தளம் வைத்தியசாலையில் அமைந்துள்ள பிரேத அறையில் காணப்படும் குளிரூட்டியை மாற்றுமாறு கேட்கப்பட்டது. புதிய குளிரூட்டி ஒன்றினை விரைவில் தருகின்றேன்.
 
 



0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors