புத்தளம் - கொழும்பு ரயில் சேவை பாதிப்பு
Posted by
Puththelil
Published on
Tuesday, December 2, 2025
(A. N. M. முஸ்பிக்)
புத்தளம் - கொழும்பு ரயில் பாதையில் பத்லு ஓயா பாலத்திற்கு அருகில் காணப்படும் ரயில் பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலத்த மழை காரணமாக, பத்துலு ஓயா ரயில் பாலம் வழியாக கடலுக்குச் செல்லும் நீர் அதிகரித்து பாய்ந்ததால், ரயில்வே பாலத்தின் அருகே உள்ள மண் தளர்ந்து, ஒரு பக்கம் இடிந்து வீழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
1880 ஆம் ஆண்டு கட்டப்பட்ட குறித்த பாலம் இதற்கு முன்பு இதுபோன்ற விபத்தை சந்தித்ததில்லை என்றும், புனரமைப்புப் பணிகளுக்கு பல நாட்கள் ஆகலாம் என்றும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.




0 comments
Readers Comments