புதிய பாராளுமன்ற உறுப்பினருக்கு புத்தளம் ஜம்இயத்துல் உலமாவின் வரவேற்பு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் அழைப்பை ஏற்று புத்தளம் மாவட்ட பா.உ என்.டீ.எம். தாஹிர் அதன் புத்தளம் அலுவலகத்திற்கு 7ம் திகதி நேற்று விஜயம் மேற்கொண்டார்.
புதிய பாராளுமன்ற உறுப்பினரை வரவேற்கும் பொருட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளையின் பிரதி தலைவர் அஷ்ஷெய்க் எம்.இஸட்.எம். சௌகி பஹ்ஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது பா.உ தாஹிர், நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்தி துவா பிரார்த்தனை பின் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ரனீஸ் பதியுதீன், புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் ஐ.ஏ.நஜீம் மற்றும் அ.இ.ஜ.உ உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பா.உ உடன் சீரற்ற காலநிலையால் நாடு முகம் கொடுத்துள்ள அனர்த்தத்தில், நிவாரணம் சம்பந்தமாக உலமாக்களின் பங்களிப்புக்களை பகிர்ந்து கொண்டபோது பா.உ என்.டி.எம். தாஹிர், எதிர்வரும் காலத்தில் புத்தளம் மாவட்ட அபிவிருத்திக்கு தன்னாலான அனைத்து உதவிகளை செய்து தருவதா இதன் போது கூறினார்.





0 comments
Readers Comments