புத்தளம் - முல்லை நகர் பகுதியில் போதைப்பொருள் மீட்பு
Posted by
Puththelil
Published on
Sunday, November 9, 2025
புத்தளம் முல்லை நகர் பகுதியில் 03 Kg 290g அளவான ஐஸ் போதைப் பொருளுடன் 39 வயதுடைய சந்தேக நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளி மாவட்டமொன்றை பிறப்பிடமாகவும் புத்தளம் அனுராதபுர வீதி முல்லை நகர் குடியேற்ற திட்டத்தில் வசித்து வருபவருமான தீப்பெட்டி வியாபார பிரதேச விநியோகத்தரான குறித்த நபரின் வீட்டின் பகுதியிலேயே போதைப் பொருள் இன்று (09) மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மேலதிக தேடுதலுக்காக மோப்ப நாயும் ஈடுபடுத்தப்பட்டதோடு தொடர்ந்து விசாரணைகளை போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments
Readers Comments