விபத்தில் சிக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் புத்தளம் தள வைத்திய சாலையில் அனுமதி
Posted by
Puththelil
Published on
Thursday, November 6, 2025
புத்தளம் – சேதபொல பிரதேசத்தில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த புத்தளம் பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த அதிகாரி, அதிக வேகத்தில் வந்த காரை நிறுத்தும் வகையில் சமிக்ஞை செய்த போது , காரின் சாரதி கட்டளையை பொருட்படுத்தாமல் தப்பித்துச் சென்றுள்ளார்.
குறித்த நேரத்தில், காரைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் மோட்டார் சைக்கிள், அதன் கட்டுப்பாட்டை இழந்து, கரம்பை பெரிய பாலத்தில் மோதியுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பொலிஸ் அதிகாரி காயமடைந்து, புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் பொலிஸ் போக்குவரத்து மோட்டார் சைக்கிளுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. தப்பியோடிய காரை கண்டுபிடிப்பதற்காக, புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



0 comments
Readers Comments