முஸ்லிம் மீடியா போரத்தின் பதவி வழி உறுப்பினர்கள் நியமனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பதவி வழி உறுப்பினர்கள் நியமனம் நேற்று (11) சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
போரத்தின் 2025/26ஆம் நடப்பாண்டுக்கான செயற்குழுவின் முதலாவது கூட்டம் இன்று தலைவர் எம்.பீ.எம். பைரூஸ் அவர்களின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது ஸ்தாபக போஷகராக போரத்தின் முன்னாள் தலைவர் என்.எம். அமீன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
அத்துடன் பின்வரும் பதவிகளுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டன. இவற்றுக்கு செயற்குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
உப தலைவர்கள்: ஷிஹார் அனீஸ் & ஜெம்சித் அஸீஸ்
தேசிய அமைப்பாளர்: றிப்தி அலி
உப செயலாளர்கள்: றம்ஸி குத்தூஸ் & சமீஹா ஷபீர்
உப பொருளாளர்: ஏ.எச்.எம். பௌசான்
சஞ்சிகை ஆசிரியர்: எஸ்.ஏ.எம். பவாஸ்
இணையத்தள ஆசிரியர்: றிஸ்வான் சேகு முகைதீன்
இக்கூட்டத்தில் போரத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்கொண்டு செல்வதற்கான துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன் போரத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் போரத்தின் செயலாளர் ஷம்ஸ் பாஹிம் மற்றும் பொருளாளர் கியாஸ் ஏ. புஹாரி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


0 comments
Readers Comments