பு / எருக்கலம்பிட்டி முஸ்லிம் கல்லூரியில் 03 மாடி கட்டிடம் திறந்து வைப்பு
Posted by
Puththelil
Published on
Monday, October 13, 2025
புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு 03 மாடி பாடசாலைக்கட்டிடம் இன்று (13) பாடசாலையின் அதிபர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் ஏறத்தாள 08 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட இக் கட்டிடத்தில் சுமார் 500ற்கும் மேற்பட்டவர்கள் அமரக்கூடிய மண்டபம் உட்பட வகுப்பறைகளும் காணப்படுகின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு ஆளும் கட்சி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.பைஸல் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.







0 comments
Readers Comments