புத்தளத்தில் நிகழும் ஜனாஸாக்கள் தொடர்பான விஷேட விழிப்பூட்டல் நிகழ்வு
புத்தளம் தள வைத்தியசாலையில் நிகழும் முஸ்லிம்களின் மரணங்கள் தொடர்பாக பல்வேறு சட்ட சிக்கல்களை பொதுமக்கள் அன்றாடம் முகம்கொடுக்கின்றனர். குறிப்பாக பிரேத பரிசோதனை (Post Mortem), மரண விசாரணை (Inquiry) மற்றும் ஜனாஸாக்களை வைத்தியசாலையில் இருந்து விடுவித்தல் ஆகியவற்றில் பல பிரச்சினைகள் எழுகின்றன. இந்நிலையில் மரணித்தவரின் உறவினர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்படுவதோடு தேவையற்ற மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
பொதுமக்கள் தவறான வழிநடத்தல்களுக்கும் குழப்பமடைவதற்குமான பிரதான காரணம் வைத்தியசாலையில் நிகழும் மரணங்கள் தொடர்பான, நாட்டின் சட்டம் மற்றும் வைத்தியசாலையின் நடைமுறைகள் தொடர்பாக அறிவின்மையும் தெளிவின்மையுமாகும்.
எனவே இவ்விடயங்களை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தெளிவூட்டும் விஷேட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த தெளிவூட்டல் நிகழ்வில் மஸ்ஜித் நிர்வாகிகள், உலமாக்கள், சிவில் அமைப்புக்கள், ஜனாஸா சங்கங்கள், அரசியல் பிரமுகர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து பயன்பெறுமாறு புத்தளம் பெரிய பள்ளிவாயல் அழைப்பு விடுக்கின்றது.
வளவாளர்:
வைத்தியர். பிரசன்ன அப்புஹாமி (சட்ட வைத்திய நிபுணர், புத்தளம் தள
வைத்தியசாலை)
🗓 திகதி: 18; ஒக்டோபர் 2025 (சனிக்கிழமை)
🕢 நேரம்: இரவு 7.30 மணி முதல் 10.00 மணி வரை
📍 இடம்: மொஹிதீன் ஜும்ஆ மஸ்ஜித், (பெரிய பள்ளி - புத்தளம்)
பெண்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


0 comments
Readers Comments