<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்

 (அபூ ஹன்னான் )

புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் கெளரவ. அரசாங்க நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன அவர்களின் தலைமையில் புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(30) இடம்பெற்றது.

வடமேல் மாகாண ஆளுநர், பாராளுமன்ற, உள்ளூராட்சி உறுப்பினர்கள் உட்பட அரசாங்க நிறுவனங்களின் திணைக்களத் தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

1. தப்போவ பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்திலுள்ள குளத்தை அபிவிருத்தி செய்தல் 

2. கற்பிட்டி பிரதேசத்தில் கோழிகளின் கழிவுகளை பசளை யாக பயன்படுத்துவதால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகள் 

3. நாதாண்டி பிரதேசத்தில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்திற்கான கட்டிட தேவை 

4. தம்போவ வனப்பிரதேசத்தில் உள்ள கல்வில பகுதியை சுற்றுலாவிற்காக அபிவிருத்தி செய்தல் 

5. புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் இட நெருக்கடியை நிவர்த்தி செய்ய அருகிலுள்ள இடத்தை பெற்றுக்கொள்ளுதல்

6. தொடுவா பகுதிகளுக்கு இறால் வளர்ப்புக்காக மின்சார வசதிகளை மேம்படுத்தல்

7. முன்மொழிக்கப்பட்டுள்ள கற்பிட்டி, புத்தளம் நீர் வழங்கள் திட்டத்திற்காக கலா ஓயாவில் இருந்து நீரை பெற்றுக் கொள்ளுதல்.

8. கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தினூடான பாடசாலைகளுக்கான விசேட வேலை திட்டம்

9. மாதம்பை மரம்பிட்டிய பிரதேசத்தில் விலங்கு உணவு தயாரிப்பு நிலையத்தினால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகள், துர்நாற்றம் வெளியேறல் தொடர்பான விடயம்.

 10. வென்னபுவ நகர திட்டம் தொடர்பான விடயம்

11. மாதம்பை பிரதேச சிலிக்கா, மணல், பொரல் அகழ்வு பணிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சூழல் பிரச்சனைகள் 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்ட செயலாளர் Y. I M. சில்வா அவர்களின் நியமனத்தின் பின்னர் இடம்பெற்ற முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors