மதுரங்குளி விபத்தில் பொலிஸ் சார்ஜண்ட் பலி
( எம்.ஏ.ஏ.காசிம்-முந்தல்)
புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி செம்பட்டை பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜனட் ஒருவர் உயிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளத்தில் இருந்து கொழும்புக்கு கோழி ஏற்றிச் சென்ற லொறியும் மதுரங்குளியில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற காரும் மதுரங்குளி செம்பட்டை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 51 வயதுடைய பொலிஸ் சார்ஜனட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் இஹலபுளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ருவான் சமீந்த சம்பத் அபேசிங்க 51 வயது மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
மரணமாக பொலிஸ் சார்ஜன்ட்டின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரனைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






0 comments
Readers Comments