புத்தளத்தின் முதலாவது ஜனாதிபதி சட்டத்தரணி
Posted by
Puththelil
Published on
Monday, September 29, 2025
புத்தளம் மண்ணின் முதலாவது ஜனாதிபதி சட்டத்தரணியாக சட்டத்தரணி. ஹபீஸ் ஆசாத் நவாவி (Azard Navavi) நியமிக்கப்பட்டுள்ளார்.
1998 ம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட சட்டத்தரணி ஆசாத் அவர்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சட்டமா அதிபராக கடமையாற்றி வருகின்றார்.
சட்டத்தரணி ஆசாத் நவாவி அவர்கள் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M. H. M. நவாவி அவர்களின் இரண்டாவது புதல்வர் என்பதோடு கண்டி புனித. திருத்துவக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
புதிதாக ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெற்றுள்ள ஆசாத் நவாவி அவர்களுக்கு புத்தெழில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.



0 comments
Readers Comments