திடீரென ஒத்திவைக்கப்பட்ட புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்தி குழு பொது கூட்டம்
Posted by
Puththelil
Published on
Sunday, September 28, 2025
நீண்ட காலம் கூட்டப்படாமல் இருந்த புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் பொதுக்கூட்டத்தை குழுவின் செயலாளர் புத்தளம் தள வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் கடந்த 23.09.2025 அன்று நடாத்த அழைப்பு விடுத்திருந்த நிலையில் திடீரென மறு அறிவித்தல் வரை அக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
இல : BH /PU/AO/07/03 மற்றும் 22.09.2025 ம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் கௌரவ. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.பைசல் அவர்களின் பங்கேற்பதற்கான திகதி கிடைக்கும் வரை மேற்படி கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அபிவிருத்திக் குழுவின் தலைவர் புத்தளம் பிரதேச செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
குறித்த பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாக குழுவிற்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 comments
Readers Comments