ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முப்பதாவது வருட பூர்த்தி
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முப்பதாவது வருட பூர்த்தியும், நிர்வாகத் தெரிவும் நேற்று, இலங்கை தபால் திணைக்கள மத்திய நிலையத்திலுள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் புத்தெழில் சார்பாக எமது ஊடகவியலாளர்கள் குழாமும் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதிகளாக தொலைத்தொடர்பு மற்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் திரு பி. பண்டார மற்றும் சவூதி அரேபியா, பலஸ்தீன் நாடுகளின் தூதுவர்கள் வருகை தந்திருந்தனர்.
விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம். பி. எம். பைரூஸ் 84 வாக்குகள் பெற்று தலைவராக தெரிவாகினார். செயலாளராக ஷம்ஸ் பாஹிம் தெரிவு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து 15 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழு தெரிவு செய்யப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட எம். பி. எம். பைரூஸ் அவர்களுக்கும், முப்பது வருட காலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தை திறம்பட வழி நாடாத்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.என். எம். அமீன் அவர்களுக்கும் எமது புத்தெழில் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.










0 comments
Readers Comments