<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் மாவட்ட மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான சந்தர்ப்பம்

( அப்துல் நமாஸ் )
ஜனாதிபதி  செயலகத்தினால் நாட்டுக்காக  ஒன்றுபடுவோம் வேலைத்திட்டத்தின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புத்தளம் மாவட்டத்திற்கான நிகழ்ச்சித் திட்டம்  நாளை  ( 18 )  முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி  வரை அமுல்படுத்தடவுள்ளதாக    முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம் ஆர்  எம்  மலிக் தெரிவித்துள்ளார். 


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 20 ஆம் திகதி புத்தளம் முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் பதிவு  செய்யப்பட்ட மஸ்ஜித் நம்பிக்கையாளர்களுக்கு மஸ்ஜித் நிர்வாகம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெறுவதுடன் மஸ்ஜித் பதிவுச்  சான்றிதழும் வழங்கி வைக்கப்படும் .    


பதிவு செய்யப்படாத மஸ்ஜிதுகளுக்கு பதிவு நடவடிக்கைக்காக ஆவணங்களை வழங்குதல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளுதல். பதிவு செய்யப்பட்ட மஸ்ஜித் நம்பிக்கையாளர்களுக்கு நியமனம் பெறுவதற்காக ஆவணங்ககளை வழங்கல், பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களைப்  பெற்றுக் கொள்ளுதல் , பதிவு நடவடிக்கைகளுக்காக திணைக்களத்திற்கு ஏற்கனவே குறைபாடாக அனுப்பப்பட்ட ஆவணங்களை பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ளல். மஸ்ஜித் பதிவு, நம்பிக்கையாளர்கள் நியமனம் மற்றும் வக்ப் சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு  ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் அது தொடர்பான ஆவணங்ககளைப் பெற்றுக் கொள்ளுதல் ஆகிய சேவைகளும் கீழ் குறிப்பிடப்படும் இடங்களில்  இதன் போது இடம் பெறவுள்ள. 

நாளை  ( 18 ) புத்தளம் பிரதேச செயலகத்திலும் நாளை மறுதினம்  ( 19 ) வண்ணாத்தவில்லு பிரதேச செயலகத்திலும் 20 ஆம் திகதி புத்தளம் முஸ்லிம் கலாச்சார மண்டபத்திலும்   21 ஆம்  திகதி கல்பிட்டி பிரதேச செயலகத்திலும் 22 ஆம் திகதி முந்தல் பிரதேச செயலகத்திலும்  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வேலைத்திட்டம் இடம் பெறவுள்ளது 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors