<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் வைத்தியசாலை அவசர சேவை பிரிவினால் மட்டுப்படுத்த சேவை

புத்தளம் தள வைத்தியசாலையில் இயங்கும் அவசர சேவை பிரிவின் சேவைகள் தற்போது  உள்ளக நோயாளிகளுக்கு மாத்திரம்  மட்டுப்பத்தப்பட்டுள்ளதாக  வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது

புத்தளம் தள வைத்தியசாலை அவசர சேவை பிரிவில் கடமையாற்றிய  இரண்டு வைத்தியர்கள் புதிய நியமனம் பெற்று  வேறு வைத்தியசாலைகளுக்கு சென்றதன்   காரணமாக அவசர சேவை பிரிவை தகுதியான வைத்தியர்களைக் கொண்டு நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீதமாகவுள்ள  ஒரு வைத்தியரை மாத்திரம் சேவைக்கு அமர்த்தி அந்தப் பிரிவை தொடர்ந்து 24 மணி நேரமும் நடாத்துவது சிரமமான காரியம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக உள்ளக நோயாளிகளுக்கு மாத்திரம் அவசர சேவை பிரிவில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. வெளியிலிருந்து எடுத்துவரப்படும் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க போதுமான வைத்தியர்கள் இல்லாத நிலையில் அந்த நோயாளிகளை புத்தளம்  வைத்தியசாலையின் அவசர சேவைப் பிரிவில் தற்போதைய சூழ் நிலையில் அனுமதிக்க   முடியாத நிலை காணப்படுன்கிறது.

புத்தளம் தள வைத்தியசாலையில் காணப்படும் அவசர சேவைப் பிரிவினை வழமை போன்று தொடர்ந்து இயங்குவதற்கு தேவையான வைத்தியர்களை பெற்றுக் கொள்ளும்  முயற்சிகளை வைத்தியசாலை வட்டாரங்ககள் மேற் கொண்டு வருவதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.            

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors