தேசிய செய்திகள் ,
கொழும்பில் குப்பை எதிர்ப்பு பேரணி
Posted by
Puththelil
Published on
Sunday, March 17, 2019
( அப்துல் நமாஸ் )
க்ளீன் புத்தளம் அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள குப்பை எதிர்ப்பு பேரணி 19 ஆம் திகதி கோல் பேசில் இடம் பெறவுள்ளது.
இது தொடர்பாக க்ளீன் புத்தளம் அமைப்பு விடுத்துள்ள அழைப்பு
சந்திகாக்கும் சரித்திர போராட்டம் அதன் உச்ச கட்டத்தினை அடைந்திருக்கும் இந்த வேளையில் கொழும்பு போராட்டம் மிக முக்கிய இலக்குகளோடு நடத்தப்படுகின்றது. எம்மை, எமது வளங்களை, எதிர்கால குழந்தைகளை அழிக்கக்கூடிய இத் திட்டத்திற்காக பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் 7,600 மில்லியன் ரூபாவினை இரத்துச் செய்தல். புத்தளத்தோடு சுருங்கிக் கிடக்கும் இப் பிரச்சினையின் கொடூரத்தினை சர்வதேசம் வரை சுத்தமாய் கேட்கச் செய்தல்.
ஒரு தேசிய பிரச்சினையை கொழும்பிற்கு புத்தளத்திற்கும் இடையிலான பிரச்சினையாக மற்றும் இனவாதமாக சித்தரிக்க முட்படும் அரசியல் சக்திகளின் போலித்தனத்தை தெளிவுபடுத்தல் என்பன இந்த நோக்கங்களில் சிலவாகும்.
உங்கள் அனைவரையும் உணர்வுபூர்வமாய் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
19 ஆம் திகதி காலை சரியாக 6 மணிக்கு புத்தளம் கொழுப்பு முகத்திடலிலிருந்து விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 comments
Readers Comments