Feature தேசிய செய்திகள் ,
புத்தளம் சர்வமத பேரவை ஒன்றுகூடல்
Posted by
Puththelil
Published on
Saturday, January 7, 2017
( ஜே.இஸட்.ஏ. நமாஸ் )
புத்தளம் மாவட்ட சர்வமத பேரவையின் ஒன்றுகூடல் புத்தளம் சேனாதிலக விருந்தினர் உணவகத்தில் இன்று இடம் பெற்றது. இலங்கை தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் வொடப்ட் நிறுவனத்தினால் புத்தளம் மாவட்ட சர்வமத பேரவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
பல்விதச் செயற்பாடுகளின் ஊடாக முரண்பாடுகளை தீர்ப்பதற்காக பங்கேற்றல் செயற்திட்டத்தின் அறிமுகம் தொடர்பாக இந்த ஒன்றுகூடலில் விளக்கமளிக்கப்பட்டது.
வொடப்ட் நிறுவன வேலை திட்ட அதிகாரி திருமதி யூ. முஸ்னியா நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். வொடப்ட் நிறுவனத்தின் வேலை திட்ட முகாமையாளர் ஏ.ஐ.எம். ரிபாஸ் வரவேற்புரையை நிகழ்த்தினார்.
இலங்கை தேசிய சமாதான பேரவையின் சிரேஷ்ட செயற்திட்ட அதிகாரி நிஷாந்த குமார ஒன்றுகூடலின் நோக்கத்தை தெளிவுபடுத்தினார். சர்வமத செயற்திட்டத்தை ( IMPACT ) அறிமுகப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு செய்வதற்கான நடைமுறை தொடர்பாக இலங்கை தேசிய சமாதான பேரவையின் உதவி செயற்திட்ட அதிகாரி ரசிகா செனவிரத்ன விளக்கமளித்தார். இலங்கை தேசிய சமாதான பேரவையின் செயற்திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன பரிந்துரை செய்தல் மற்றும் சமூக வலைப்படுத்தல் தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
இறுதியாக 2017 ஆம் ஆண்டுக்காக செயற்படுத்தப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல் இடம் பெற்றது.

0 comments
Readers Comments