Feature Photo Gallery ,
புத்தளம் மலாய் சங்கத்தின் ஒன்றுகூடல்
Posted by
Puththelil
Published on
Tuesday, January 3, 2017
புத்தளம் மலாய் சங்கத்தின் ஒன்றுகூடல் நிகழ்வொன்று புத்தளம் DC Pool இல் சங்கத்தின் தலைவர் ஐ. சபார் தலைமையில் டிசம்பர் 31ஆம் திகதி நடைபெற்றது. புத்தளம், தில்லையடி, மணல்குன்று உட்பட புத்தளம் பிரதேசத்திலுள்ள மலாய் சங்கத்தின் உறுப்பினர்கள் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்வுகள் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் இதன் நிகழவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலேசிய நாட்டின் தேசிய விளையாட்டான Spektakro விளையாட்டுப் போட்டி இந்த நிகழ்வில் விசேட அம்சமாக இடம் பெற்றது. மாபோல Spektakro அணிக்கும் புத்தளம் Spektakroஅணிக்கும் இடையே சினேகபூர்வ போட்டியொன்று இடம் பெற்றது. இந்த போட்டியில் புத்தளம் Spektakro அணி வெற்றி பெற்றதுடன் மாபோல Spektakro அணி புத்தளம் மலாய் சங்கத்தினால் கெளரவிக்கப்பட்டது.
புத்தளத்தில் காணப்படும் ஏழு Spektakro அணிகளுக்கிடையே ஏற்பாடு செய்யபட்ட போட்டியில் Malay Sphere அணி செம்பியன் அணியாகவும், Malay Red அணி ரன்னர் அப் அணியாகவும் தெரிவாகின. இந்த நிகழ்வில் இடம் பெற்ற நீர் நிரப்புதல் இரட்டையர் போட்டியில் மெளலவி ஆஸாத் சிராஸ், ரூமி லேய் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
புத்தளம் மலாய் சங்கத்தின் இஸ்தாபர்களான T.M.SABAR, K.T.SALLAY, M.NILAM AMITH, T.N. AMJADEEN, T.C.BABANOOR T.M.LATHEEF ஆகியோர் இந்த நிகழ்வின் போது கெளரவிக்கப்பட்டனர்.
Spektakro விளையாட்டுப் போட்டி























0 comments
Readers Comments