<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஹைப்பர்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கட் திருவிழா

( எம்.ஏ.எம். அப்fபாfன் )
ஹைப்பர்ஸ் மாணவர் கழகத்தின் ஏற்பாட்டில் புத்தளம் சூம் கார்டிங் நிறுவனத்தின் அனுசரணையோடு  ஹைப்பர்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டி திருவிழா ஒன்று இடம்பெறவுள்ளது.

20 வயதிற்குட்பட்டோருக்காக நடாத்தப்படவுள்ள இந்த  கிரிக்கட் போட்டி சுற்றுப் போட்டி ஜனவரி  7 ஆம் திகதி முதல்  ஆரம்பமாகவுள்ளது. இந்த சுற்றுப் போட்டியில் விளையாடுவதற்காக  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து  கிரிக்கட் அணிகள் பதிவாகி உள்ளன. எதிர்வரும் 7 ஆம் திகதி சனிக்கிழமை புத்தளம் இஜ்திமா விளையாட்டு  மைதானத்தில் ஆரம்பமாக உள்ள ஹைப்பர்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதிவரை நடைபெறும் என போட்டி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

தொடரில் வெற்றி பெரும் செம்பியன் அணிக்கு செம்பியன் கிண்ணத்துடன் 30 ஆயிரம் ரூபா பணப் பரிசும் வழங்கப்படும். ரன்னர் அப் அணிக்கு 15 ஆயிரம் ரூபா பணப்பரிசு வழங்கப்படும். மேலதிக தகவல்களுக்கு ஹைப்பர்ஸ் மாணவர் கழக தலைவர்   எம்.என்.எம். நஸ்ரக்  0766481330 அல்லது ஏற்பாட்டு குழு செயலாளர் எச். பைக்கர் 0766256198  என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேர்கப்பட்டுள்ளனர்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors