Feature பிரதான செய்திகள் ,
மனித உரிமை அமைப்பினால் சப்பாத்துக்கள் அன்பளிப்பு
Posted by
Puththelil
Published on
Saturday, January 14, 2017
( அப்துல் நமாஸ் )
இலங்கை மனித உரிமை அமைப்பினால் முகத்துவாரம் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. இலங்கை மனித உரிமை அமைப்பின் திட்ட பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஸராபத்துல்லாஹ்வின் முயற்சியினால் இந்த பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை மனித உரிமை அமைப்பினால் நாட்டிலுள்ள வசதி குறைந்த பாடசாலைகள் தெரிவு செய்யபட்டு அங்கு கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் முகத்துவாரம் வித்தியாலயம் இலங்கை மனித உரிமை அமைப்பினால் தெரிவு செய்யபட்டு மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வித்தியாலய அதிபர் எம். ஹரமைனின் தலைமையில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை மனித உரிமை அமைப்பின் பணிப்பாளர் பேராசிரியர் ஜயந்த களுபோவில, எஸ்.ஆர்.எம். ஸராபத்துல்லாஹ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments