<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் அபிவிருத்திக்காக 548 மில்லியன் ரூபாய்கள்

( அப்துல் நமாஸ் ) 
2016 ஆம் ஆண்டில் புத்தளம் மாவட்டத்தில்  நடைமுறைப்படுத்தப்பட்ட கிராம உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களுக்காக 548  மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.  இதன் மூலம்  1,049  அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று புத்தளம் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ்.பீ. சந்தநாயக தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டில் அரசினால் புத்தளம் மாவட்டத்தில்  நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும்    2017 ஆம் ஆண்டில் அரசினால் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள அபிவிவிருத்தி தொடர்பாக புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் கூட்டமொன்று புத்தளம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.என். சித்ரானந்த தலைமயில் நடைபெற்ற இந்த கூடத்தின் போதே மேற் கூறிய தகவல்களை திருமதி சந்தநாயக தெரிவித்தார்.  தொடர்ந்து விளக்கமளித்த திருமதி சந்தநாயக    

548  மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு மேற் கொள்ளப்பட்ட  1,049  அபிவிருத்தி திட்டங்கள்   536.98  மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்ட்டு  பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

சிலாபம்  பிரதேச செயலாளர் பிரிவில் ஆகக் கூடிய  105  அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு அவற்றுக்காக  49 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததன. சிலாபம்  பிரதேச செயலாளர் பிரிவில் மேற் கொள்ளப்பட்ட சகல அபிவிருத்தி திட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை புத்தளம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 2016 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி திட்டங்களில் ஆகக் குறைந்த அபிவிவிருத்தி திட்டங்கள் பள்ளம  பிரதேச செயலாளர் பிரிவில் மேற் கொள்ளப்பட்டிருந்தன. இங்கு 23  அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த 18 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

 2016 ஆம் ஆண்டுக்காக புத்தளம் மாவட்டத்தில்  நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் 43 அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இவற்றுக்காக  22  மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன என்று தெரிவித்தார்.
 
 
 
 







0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors