கட்டுரை ,
புத்தளம் மக்கள் கற்க வேண்டிய பாடங்கள்
Posted by
Puththelil
Published on
Saturday, February 13, 2016
ஆசிரியர் தலைப்பு :
புத்தெழில் செய்திப் பத்திரிகை 01 - 15 பெப்ரவரி 2016
பாடசாலை மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச பாடநூலில் புதிய நடைமுறை விடயங்கள் அச்சிடப்பட்டிருக்காது. காலத்திற்குக் காலம் மாறி வரும் உலக நிகழ்வுகளையும் நடைமுறை விடயங்களையும் அந்த மாணவர்கள் தேடித் தேடித்தான் கற்க வேண்டும். புதிய அச்சுப் பதிவிற்கு நூற்கள் செல்லும் போதுதான் நடைமுறை விடயங்கள் அல்லது புதிய விடயங்கள் அந்த நூற்களில் இணைக்கப்படும்.
அதிலும் குறிப்பாக வணிக மாணவர்கள் நடைமுறை விடயங்களை தேடிக் கற்க வேண்டும். நடைமுறை விடயங்கள் தொடர்பாக காலத்திற்குக் காலம் வெளியிடப்படும் புதிய நடைமுறை விடயங்கள் தொடர்பான நூல்களை விலை கொடுத்து வாங்கி கற்க வேண்டிய நிலையில் குறிப்பாக வணிகப் பிரிவு மாணவர்கள் காணப்படுகின்றனர். அல்லது ஊடகங்களினூடாக அவற்றை தேடிக் கற்க வேண்டும்.
அதே போன்று பரீட்சையில் இணைக்கப்படும் புதிய விடயங்கள் தொடர்பாகவும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் மூலம் புதிய விடயங்களை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அதே போன்றுதான் பொது மக்களும் நடைமுறை விடயங்களை காலத்திற்குக் காலம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக அரசினால் முன்வைக்கப்படும் புதிய சட்டங் கள், அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பாக ஒவ்வொரு பொது மகனும் அறிந்திருக்க வேண்டும். இந்த விடயங்களை அறிந்து கொள்ளாத நிலையில் எமது மக்களுக்காகக் குரல் கொடுக்கவோ அல்லது எமது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள், அநீதிகள் தொடர்பாகவோ கருத்துக்களை முன்வைக்க முடியாது.
இலங்கையில் மிக அண்மையில் ஏற்பட்ட மாற்றங்களான 19வது அரசியல் சீர்திருத்தம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் அத்துடன் இறுதியாக இலங்கையின் அரசியல் வரலாற்றில் அரசியல் அமைப்பை மாற்றுவது தொடர்பான விடயங்கள் போன்ற விடயங்களை நாம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பாக எம்மில் எத்தனை பேருக்கு விளக்கம் காணப்படுகின்றது என்பது கேள்விக் குறியே.
அதிலும் புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களும், புத்தளம் தொகுதியில் வாழும் முஸ்லிம் மக்களும் எந்தளவு மேற் கூறிய விடயங்கள் தொடர்பாக அறிந்து வைத்துள்ளனர் என்று நோக்கினால் நூற்றுக்கு 25 சத வீதமான மக்களாவது இது தொடர்பான அறிவினைப் பெற்றுள்ளனரா என்பது சந்தேகமே.
19வது அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக புத்தளத்திலுள்ள சிறுபாண்மை மக்கள் எந்தளவு அறிந்து வைத்துள்ளார்கள் அல்லது கற்றுக் கொண்டார்கள், அதே போன்று நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்காக புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வட்டார எல்லைகள் தொடர்பாக புத்தளம் மக்கள் எந்தளவு அறிந்து வைத்துள்ளார்கள் என்று கேட்கப் போனால் அதிலும் 25 சத வீதமாவது அது தொடர்பான அறிவைப் பெற்றிருக்க மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறலாம். அதே போன்று தற்போது பேசப்பட்டு வரும் அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பாக என்ன திட்டங்களை எமது புத்தளம் மக்கள் முன்வைக்கப் போகிறார்கள் என்றால் அதுவும் குறிப்பிட்ட ஒரு சிலர் தான் அது தொடர் பான பூரண விளக்கத்தைப் பெற்றிருப்பர்.
இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது மக்களுக்காக புதிய அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்து வரும் வேளை புத்தளத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் என்ன கருத்துக்களை முன்வைக்க உள்ளனர், புதிய அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பதற்கு முன்பு அரசியல் அமைப்பு தொடர்பான அறிவை ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டும்.
எனவேதான் நாம் கூறுகின்றோம், புத்தளம் மக்கள் கற்க வேண்டியிருப்பது ஏராளம். மேற் கூறிய விடயங்கள் தொடர்பான அறிவை வழங்க வேண்டிய பொறுப்பு பலருக்கு இருக்கிறது. சமூக தலைமைகள், மதஸ்தாபனங்கள், சமூக சேவை அமைப்புக்கள் என்று பலருக்கும் இந்த பொறுப்பு காணப்படுகின்றது. புத்தளத்திலுள்ள சிறுபாண்மை மக்களுக்கு காலத்திற்கேற்ப புதிய விடயங்களை நடைமுறை விடயங்களை கற்பிக்க வேண்டும். அதிலும் சமூகத்தை நோக்காகக் கொண்டு கற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். சமூகத்திற்காக என்று கூறி அதையும் ஒரு வியாபாரமாக்கக் கூடாது.
புதிய விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்க பல்துறை சார்ந்தவர்களை வளவாளர்களாக அழைத்து வரவேண்டும். அவர்களுக்காக ஒரு கொடுப்பனவை கட்டாயம் செலுத்த வேண்டும். சமூக சேவை என்று கூறிக்கொண்டு பொது மகனிடம் கட்டணம் அறவிட்டு கற்பிக்க முனையக் கூடாது. பொது மக்களுக்கு தேவையான விடயங்களை இலவசமாகவே வழங்க வேண்டும். ஏனைய மாவட்டங்கள் இதற்கு உதாரணம்.
புத்தளம் மக்கள் கற்க வேண்டியிருப்பது ஏராளம். எனவே புதிய விடயங்கள், நடைமுறை விடயங்கள் தொடர்பான அறிவூட்டலை காலத்திற்குக் காலம் தேவைக்கேற்ப வழங்க வேண்டும். விரல் விட்டு எண்ணக் கூடிய பொது மக்கள் பங்குபற்றினாலும் எமது பொறுப்பை நாம் செய்தே ஆக வேண்டும். அல்லது புத்தளம் மக்கள் ஒன்றும் தெரியாத மக்களாகவே இருந்துவிடுவர்.

0 comments
Readers Comments