Feature பிரதான செய்திகள் ,
அவசர சிகிச்சைப் பிரிவு நுழைவாயில் திறந்து வைப்பு
Posted by
Puththelil
Published on
Friday, January 29, 2016
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் தள வைத்தியசாலைக்கு புத்தளம் ஹொல்ஸிம் லங்கா லிமிடட்டினால் 35 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு நுழைவாயில் பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் சுமித் அத்தநாயக்க தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, புத்தளம் ஹொல்ஸிம் லங்கா லிமிடட் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிலிப் ரிச்சர்ட் ஆகியோர் அவசர சிகிச்சைப் பிரிவு நுழைவாயிலை திறந்து வைத்தனர். புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம். சித்ரானந்த, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டீ.எம். தாகிர், புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி , புத்தளம் தள வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகர் அசோக் பெரேரா உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments