<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிரா, இந்து கல்லூரிகள் மூடப்பட்டன

( ஏ.என்.எம். முஸ்பிக் )

புத்தளத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் புத்தளம்  ஸாஹிரா தேசிய பாடசாலை மற்றும் இந்து மத்தியக் கல்லூரி ஆகியவற்றில் வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற் கொள்ள முடியாத நிலையில் இவ்விரு பாடசாலைகளும் இன்று திங்கட்கிழமை மூடப்பட்டன.  

இன்று  மூன்றாம் தவணைப் பரீட்சை ஆரம்ப தினமாக  இருந்ததன் காரணமாக மாணவர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலைகளுக்கு வருகை தந்தனர். எனினும் பாடசாலை மைதானம் மற்றும் வகுப்புகளுக்குள் வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக பாடசாலையின் சாதாரண நடவடிக்கைகளை மேற் கொள்ள முடியாத நிலையில் இவ்விரு பாடசாலையின் மாணவர்களும் வீடுகளுக்கு  திருப்பி அனுப்பப்பட்டனர். 

புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி ஆகியோர் ஸாஹிரா பாடசாலைக்கு வருகை தனது வெள்ள நீரை அகற்றுவது தொடர்பாக கலந்துரையாடினர்.

அதேவேளை புத்தளம் நகரிலுள்ள வீதிகளில் வெள்ள நீர் வழிந்தோடாததனால் வீதிகளில் நீர் தேங்கி நிபதைக் காணக் கூடியதாகவும்  உள்ளது. புத்தளம் நகரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொது மக்கள் சமைத்த உணவுகளை விநியோகித்து வருகின்றனர். 


ஸாஹிரா தேசிய பாடசாலை
 
 
 
இந்து மத்திய கல்லூரி 
 
 
 

புத்தளம் நகரில்


 
 

 
சமைத்த உணவுகள் விநியோகம் 
வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புத்தளம் மக்கள் சமைத்த உணவுகளை விநியோகித்து வருகின்றனர். 
 


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors