<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளத்தில் தொடர் மழை ..............

( நளின், முஸ்பிக், ஜூட் )
கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக புத்தளம் மாவட்டம் பதிப்புக்குள்ளாகியுள்ளது.  வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 1554 குடும்பங்களைச்சேர்ந்த 4661 பேர் இடம் பெயந்துள்ளனர். இவர்களுக்காக ஆறு  முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு தெரிவித்துள்ளது.  புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் பல இடங்களில் வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதனால் இந்த வீதியால் பயணிக்கும் வாகனங்களை பாதுக்காப்புடன் பயணிக்குமாறு பொலிசார் கேட்டுள்ளனர்.
 
 
புத்தளம் குருநாகல் வீதியில் ஆராச்சிவில்லு பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தினால் மின் கம்பம் ஒன்று சேதத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக புத்தளம் நகரில் மாலை வேளையில் மின் துண்டிக்கப்பட்டிருந்தது.
 
 
 
 
 
 அதேவேளை புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் தாராவில்லு பிரதேசத்தில் மரமொன்று முறிந்து விழுந்ததில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
 
 
 


தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக புத்தளம் நகரிலுள்ள வீதிகளும் வெள்ள நீரினால் நிறைந்து காணப்படுகின்றன. கடையாக்குளம் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு ஐ.தே.க புத்தளம் இளைஞர் அமைப்பாளர் எம்.என்.எம். நுஸ்கி சமைத்த  உணவு வழங்கி வைத்தார்.
 

புத்தளம் நகரப் பகுதியில் கடையாக்குளம் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் வெள்ள நிர் வழிந்தோடுவதற்கு  தேவையான அவசர  பணிகளை செய்யுமாறு புத்தளம் நகர சபை செயலாளரை நவவி கேட்டுள்ளார்.

வெள்ள நீர் காரணமாக சிலாபம் வைத்தியசாலை நான்காம் வார்ட் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு என்பவற்றில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கு ஏற்பாடுகளை வைத்தியசாலை நிர்வாகம் செய்துள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் ஏனைய நோயாளிகள் மாராவில மற்றும் குளியாப்பிட்டி வைத்தியசாலைகளுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
 


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors