Feature பிரதான செய்திகள் ,
ஆயுர்வேத வைத்தியசாலைக்கு இருக்கைகள் அன்பளிப்பு
Posted by
Puththelil
Published on
Tuesday, October 6, 2015
புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு புத்தெழில் செய்திப் பத்திரிகையினால் இருக்கைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவிற்கு வருகை தரும் நோயாளிகளுக்கு அமர்வதற்கு போதியளவு இருக்கைகள் இல்லாதிருப்பதாக வைத்தியசாலை வைத்தியர்கள் சுட்டிக் காட்டியதைத் தொடர்ந்து இந்த இருக்கைகள் புத்தெழில் செய்திப் பத்திரிகையினால் அன்பளிப்பு செய்யப்பட்டன.
புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்க தலைவர் ஜே.இஸட்.ஏ. நமாஸ், புத்தெழில் செய்திப் பத்திரிகை செய்தியாளர் ஏ.என்.எம். முஸ்பிக், புத்தெழில் ஆசிரியர் கே. அஸ்மி முஹம்மத், சங்க தனாதிகாரி எஸ்.ஐ. ஹமீத் மரைக்கார் ஆகியோர் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய அதிகாரி எம்.ஏ.என். மதுவந்தி மற்றும் வைத்தியர் ஜே.எம். நைஜிஸ் ஆகியோரிடம் இந்த இருக்கைகளை இன்று கையளித்தனர்.

0 comments
Readers Comments