<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளத்தில் உலக சுற்றாடல் தினம்

( ஏ.என்.எம். முஸ்பிக் )


உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு  புத்தளம் மாவட்ட விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், புத்தளம் சூரியன் பெண்கள் கூட்டமைப்பு, இளம் பெண்கள்  கிருஸ்தவ சங்கம்புத்தளம் நகர சபை, வனபரிபாலன திணைக்களம் ஆகியன இணைந்து புத்தளம் நகர சபைக்கு சொந்தமான தரு உயன  வளாகத்தில் மர நடுகை நிகழ்வொன்றினை நடாத்தினர். இந் நிகழ்வின் போது புத்தளம் இந்து மத்திய கல்லூரி , பாத்திமா மகளிர் கல்லூரி, சென். மேரிஸ் பாடசாலை, ஆனந்த தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளிலுள்ள மாணவர்களும்  ஆசிரியர்களும் , நகர சபை நிர்வாக அலுவலர் உட்பட ஏனைய உத்தியோகத்தர்கள், தில்லையடி கிராம அலுவலர், தில்லையடி சமுர்தி அதிகாரி மற்றும் ஏற்பாட்டாளர்களும் இளைஞர் குழுக்களிலுள்ள அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர். இதன் போது பாடசாலைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன் ஏனைய பொது இடங்களில் நாட்டுவதற்கெனவும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன மேலும் புத்தளம் நகர சபை, பிரதேச செயலகம் ஆகியனவற்றிற்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors