புத்தளம் தேர்தல் களம் ,
முஸ்லிம் காங்கிரஸ் புத்தளத்தில் தனித்தே போட்டியிடும்
Posted by
Puththelil
Published on
Sunday, June 7, 2015
( அப்துல் நமாஸ் )
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட மத்திய குழு தலைவர் ஏ.என்.எம். ஜெளபர் மரைக்காரர் புத்தெழிலுக்குத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட மத்திய குழுக் கூட்டம் ஜெளபர் மரைக்கார தலைமையில் நேற்று இரவு புத்தளம் முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற போது வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், புத்தளம் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்கள், அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்ட வடமேல் மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். நவவி உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வைத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெளபர் மரைக்கார் முதலாவது மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு டாக்டர் ஐ.எம்.இல்லியாசை மாகாண சபை உறுப்பினராகப் பெற்றுக் கொண்டோம். அதே போன்று புத்தளம் நகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐ.தே. கட்சியுடன் இணைந்தே இது வரை நாம் போட்டியிட்டுள்ளோம். முதலாவது முறையாக அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்டத்தில் தனித்து போட்டியிட உள்ளது.அத்தோடு நிச்சயம் ஒரு உறுப்பினரைப் பெற்றுக் கொள்வோம்.
புத்தளம் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம், செயலாளர் ஹசன் அலி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜெளபர் மரைக்கார் தெரிவித்தார்.

0 comments
Readers Comments