<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் தொகுதி முஸ்லிம் வேட்பாளர்களை ஒன்றுபடுத்தும் முயற்சி

 
 நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக புத்தளம் தொகுதியில் போட்டியிட தயாராகவுள்ள முஸ்லிம்  வேட்பாளர்களை ஒன்றுபடுத்தி போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.

உலமாக்களின் பிரதிநிதிகள், வைத்தியர்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்விமான்கள் உட்பட பலரும் இணைந்து இந்த விடயம் தொடர்பான   கலந்துரையாடல்களை நடாத்தி  வருகின்றனர். முஸ்லிம் வேட்பாளர்கள்  பல்வேறு கட்சிகளில் பிரிந்து போட்டியிடுவதன் மூலம் புத்தளம் தொகுதிக்கான சிறுபான்மை வேட்பாளரை இம் முறையும் பெற்றுக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையே ஏற்படும்   என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் வேட்பாளர்களை ஒற்றுமைப்படுத்தும் இறுதிக் கட்ட முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

புத்தளம் தொகுதியில் பாராளுமன்ற தேர்தலுக்காக போட்டியிட தயாராகவுள்ள முஸ்லிம் வேட்பாளர்களை அழைத்து அவர்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளை மேற் கொள்ளுமாறு புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபையிடம் வேண்டுகோள் ஒன்றினை உலமாக்கள்,வைத்தியர்கள் ஆசிரியர்களின் பிரதிநிதிகள் விடுத்துள்ளனர்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors