Feature புத்தளம் நட்சத்திரங்கள் ,
தெற்காசிய மாநாட்டுக்கு உலுக்காப்பள்ளம் மாணவிகள்
Posted by
Puththelil
Published on
Wednesday, June 17, 2015
வடமேல் மாகாண மட்டத்தில் நடைபெற்ற சுகாதார
ஆரோக்கிய புதிர் போட்டியில் (Do You Know Health Promoted Competition)
புத்தளம் கல்வி வலயத்தில் உலுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா
வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 11 இல் கல்வி பயிலும் ஏ.ஏ. பாத்திமா பஸ்ஹா, வை. சம்லா சுஹைனா
ஆகிய இரு மாணவிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2015.06.16 மற்றும் 17 ஆம் திகதிகளில்
நடைபெறும் தெற்காசிய நாடுகளின் நீர் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான மாணவர்
மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இந்த இரு மாணவிகளும் பெற்றுள்ளனர்.
வடமேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 32
மாணவர்களில் புத்தளம் கல்வி வலயம் சார்பாக கலந்து கொள்ளும் வாய்ப்பு
இம் மாணவிகளுக்கு மாத்திரமே கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments
Readers Comments