Feature பிரதான செய்திகள் ,
தீயினால் லூலூ சுப்பர் மார்க்கெட் சேதம்
Posted by
Puththelil
Published on
Sunday, June 14, 2015
( நளின் )
புத்தளம் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள லூலூ சுப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீயினால் குறித்த சுப்பர் மார்க்கெட் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின் கசிவு காரணமாவே இந்த தீ ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணை மூலம் தெரிய வருவதாக பொலிசார் தெரிவித்தனர். சுப்பர் மார்க்கெட்டில் காணப்பட்ட பொருட்கள் முற்றாக சேதமடைதுள்ளன. புத்தளம் பொலிசார், விமானப் படை மற்றும் கடற் படை வீரர்கள், புத்தளம் நகர சபை ஊழியர்கள் உட்பட பொது மக்களும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீயினால் உயிர் சேதம் எதுவும் இடம் பெறவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

0 comments
Readers Comments