Feature புத்தளம் நட்சத்திரங்கள் ,
நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்திய போட்டியில் புத்தளம் மாணவி முதலிடம்
Posted by
Puththelil
Published on
Thursday, May 14, 2015
( அப்துல் நமாஸ் )
நோர்வே செய்தி
நோர்வே முத்தமிழ் அறிவாலயம் இலங்கை
மாணவர்களுக்காக நடாத்திய (2014) சிறுகதைப் போட்டியின் முடிவுகள் வெளியாகியுள்ளன. முதலாமிடம்: ஏ.என்.எப்.நஹ்ஸத் எழுதிய
"அறுவடை " (புத்தளம் பாத்திமா பாலிகா மகாவித்தியாலயம்) இரண்டாமிடம்: மதுர்சிகா தனபாலசிங்கம் எழுதிய "ரெத்தம்" (யாழ்
வேம்படி மகளிர் கல்லூரி) மூன்றாமிடம்: பவுஸ்ரினா யோசப் எழுதிய
"என்னுயிரே" (கொழும்பு சென்.அந்தோனிஸ் பாலிகா மகா வித்தியாலயம்)
பாராட்டுப் பெறுவோர்: ஸ்டெப்னி வாமதேவன்
(கொழும்பு), லூட்ஸ் பூரணி மரியநாயகம்
(யாழ்ப்பாணம்), சுகன்ஜா மனோகரன் (நீர்வேலி), கா.குனரஞ்சனி (மாத்தளை), தி.திவ்யானி
(நுவரெலியா), கு.ஜனார்த்தனா (யாழ்ப்பாணம்), லக்ஷனா ஸ்ரீரங்கநாதன் (உரும்பிராய்), வேதநாயகம் கெலன் கீர்த்தனா (யாழ்ப்பாணம்), கிறிஸ்டின் சகாயராஜன் ஆன் பிரசாந்தினி (கொழும்பு), ஜான்சி நிவேதிகா
ரவிச்சந்திரன் (வரகாபொல), கி.சரண்யா (கொழும்பு).
அனைவருக்கும் முத்தமிழ் அறிவாலயம் தனது
பாராட்டுகளைத் தெரிவிக்கிறது. இவர்களுக்குரிய பரிசுத்தொகை நேரடியாக விரைவில்
அனுப்பப்படும்!
-----------------------------------------------------------------------
முதலிடத்தைப் பெற்ற ஏ.என்.எப். நஹ்ஸத்துக்கான 25,000 ரூபா பரிசினை நோர்வே முத்தமிழ் அறிவாலயம் அதிபர் கே.சிவானந்தன் நீர்கொழும்பில் வைத்து நேற்று வழங்கி வைத்தார். 2013 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிவாலயம் முதல் முறையாக இலங்கை
மாணவர்களுக்காக நடாத்திய சிறுகதைப் போட்டியில் நஹ்ஸத் ( விடிவை நோக்கி ) ஆறுதல் பரிசினைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நோர்வேயில் தமிழ் மொழிக் கல்வியில் தனது 25ஆவது ஆண்டை நிறைவு செய்யும் வேளையில் இலங்கை மாணவர்களது படிப்பாற்றலை ஊக்குவிக்கும் முகமாக சிறுகதை போட்டியொன்றினை நோர்வே முத்தமிழ் அறிவாலயம் 2013 ஆம் ஆண்டில் நடாத்தியது. அதன் தொடராகவே 2014லும் சிறுகதைப் போட்டி நடாத்தப்பட்டது.

0 comments
Readers Comments