தேசிய செய்திகள் ,
தேசிய சமாதான பேரவையின் நிகழ்வு
Posted by
Puththelil
Published on
Sunday, March 29, 2015
( நமாஸ், அஸ்மி )
இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவற்கான சர்வமத மற்றும் சமூக தலைவர்களின் ஒத்துழைப்பை பலப்படுத்தலும் அதற்கான ஊடக பங்களிப்பை மேம்பாடு செய்தலும் என்ற நிகழ்வு நேற்று மன்னாரில் இடம் பெற்றது.
காலை முதல் மாலை 3.15 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச சேர்ந்த சர்வமத குழுக்களின் பிரதிநிதிகளும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். புத்தளம் வொடப்ட் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் டீ.எல்.எம். மக்கீன் தலைமையில் மூன்று ஊடகவியலாளர்களும் சர்வமத குழு உறுப்பினர்கள் மூவரும் புத்தளம் மாவட்டம் சார்பாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலங்கை தேசிய சமாதானப் பேரவை நிறைவேற்று பணிப்பாளர் டாக்டர் ஜெஹான் பெரேரா, சுதந்திர ஊடக அமைப்பின் அழைப்பாளர் சுனில் ஜயசேகர, நிகழ்ச்சித் திட்ட அதிகாரி அப்துல் அமான் ஆகியோர் இந்த நிகழ்வில் வளவாலர்களாக கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments