Feature தேசிய செய்திகள் ,
விபத்து தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும், வைத்தியசாலை பணிகள் இஸ்தம்பிதம்
Posted by
Puththelil
Published on
Monday, October 20, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
பதுளுஓயா பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இடம் பெற்ற வாகன விபத்தில் அம்புலன்ஸில் பயணம் செய்த புத்தளம் தள வைத்தியசாலை வைத்தியர் க்ரிஷாணி எறங்க ஜெயவர்தனவின் இறுதிக் கிரியைகள் இன்று றாகமவில் நடைபெற்றன. வடமேல் மாகாண சுகாதார அமைச்சர் டீ.பீ. ஹேரத், வடமேல் மாகாண சுகாதார பணிப்பாளர் என். பரீத், புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா, புத்தளம் தள வைத்தியசாலை பிரதம இலிகிதர் எச்.எம்.எம். ஷபீக், புத்தளம் தள வைத்தியசாலை வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலை பணியாளர்களும் இறுதிக் கிரியையில் கலந்து கொண்டனர்.
அதே வேளை அம்புலன்ஸ் விபத்து தொடர்பில் பொலிஸாரினால் நீதியான விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி இன்று காலை புத்தளம் தள வைத்தியசாலையில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது. இதன் காரணமாக வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவை தவிர அனைத்து சேவைகளும் இஸ்தம்பிதமடைந்தன. எதிர்ப்பு ஊர்வலமும் இடம் பெற்றது. தமது கோரிக்கையை புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முன் வைத்தனர்.

0 comments
Readers Comments