<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

சமூக நிதியத்தினால் புத்தளம் வைத்தியசாலைக்கு பரிசோதனை ஆய்வு கூடம்

( ஹமீது மரைக்கார் )
புத்தளம் தள வைத்தியசாலை பிரதம இலிகிதர் எச்.எம்.எம். ஷபீக்கின் முயற்சியினால் சகல வசதிகளுடன் கூடிய பரிசோதனை ஆய்வு கூடமொன்று புத்தளம் தள வைத்தியசாலைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்காக 60 இலட்சம் ரூபா நிதியை சமூக நிதியம் வழங்கியுள்ளது.


புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்தி குழுத் தலைவரும் புத்தளம் பிரதேச செயலாளருமான எம்.ஆர். மலிக் மற்றும் சமூக நிதியத்தின் தலைவர் ஏ.எச்.ஸனூஸ் ஆகியோர் இது தொடர்பான உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டனர். சமூக நிதியத்தின் தலைவர் ஏ.எச்.ஸனூஸ் முதல் கட்டமாக 20 இலட்சம் ரூபாவிற்கான காசோலையை புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அசோக் பெரேராவிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் புத்தளம் தள வைத்தியசாலை பிரதம இலிகிதர் எச்.எம்.எம். ஷபீக் உட்பட வைத்தியசாலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors