<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளத்தில் முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயம்

( அப்துல் நமாஸ் )
ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயமொன்று இன்று இரவு இஷா தொழுகையின் பின்பு புத்தளம் மஸ்ஜித் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.  வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் முஸ்லிம் காங்கிரஸின் கிளை காரியாலயத்தை திறந்து வைத்தார். முதல் நிகழ்வாக சமாதான நீதவான்களாக நியமனம் பெற்றவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், புத்தளம் நகர சபை உறுப்பினர் எம்.டீ.எம்.என். அமீன், புத்தளம் நகர சபை முன்னாள்  உறுப்பினர்களான ஏ.என்.எம். ஜவ்பர் மரைக்கார்,  எஸ்.ஆர்.எம். முஹ்ஸி, ஏ. ஹாதி உட்பட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 





0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors