கட்டுரை ,
அமைச்சர் சனத் நிசாந்தவின் ஊடகவியலாளார் சந்திப்பு
Posted by
Puththelil
Published on
Thursday, March 13, 2014
( ஐ.எல்.எம். சியாது )
சிலாபம் கரிலோனா ஹோட்டலில் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்தவினால் 11-03-2014 செவ்வாய் கிழமை காலை 10.00 மணிக்கு புத்தளம் மாவட்ட ஊடகவியலாளருக்கான பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது அமைச்சின் கீழ் உள்ள கைத்தொழில் விவசாயம் மீன்பிடி கால்நடை நீர்ப்பாசன அமைச்சின் செயலாளாலர்களால் 2013 ல் மேற் கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் 2014 ல் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் மேற் கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய விளக்கம் அளிக்கப்படடது.
புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த மூன்று மொழிகளிலும் கடமை புரியூம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இச் சந்திப்பில் இறுக்கமான கேள்விகளும் சுருக்மான பதில்களும் தெரிவக்கப்பட்டன. அதன் விரிவான ஒரு கண்ணோட்டம் கீழே தரப்படுகிறது.
கால்நடைகள்
சாணியை ஓர் இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு கொண்டு செல்வதன் மூலமும் கால்நடைகளை மேய்க்கக் கூடியவர்கள் மூலமும் கால்நடைகளை ஏற்றி செல்வதன் மூலமும் கால்நடைகளை மிருக வைத்தியர்கள்கள் வைத்தியம் செய்ய செல்லும் வாகனங்கள் மூலமும் தற்பொழுது கால்நடைகளுக்கு மத்தியில் பரவிவரும் வைரஸ் நோய் பரவலாம் என அஞ்சுவாதாக தெரிவிக்கப்பட்டது.
மாடு பன்றி ஆடு போன்றவைகளை அறுப்பதை வடமேல் மாகாண சபை தடைசெய்த போதும் சில உள்ளுராட்சி மன்றங்கள் டெண்டர் பணத்தை வருமானமாக பெறுவதற்காக ஒத்துழைக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கப்பட்டது. ஒரு மாதகால இடைவெளிக்குள் நோயை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்ட போதும் சில மிருக வைத்தியார்கள் வாகன கட்டணம் மருத்துவ கட்டணம் கோரியதாகவும் குறித்த காலத்துக்குள் வைத்தியம் செய்ய முன்வராததால் மிருகங்கள் இறந்துள்ளதாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மானவேரி பகுதியிலுள்ள பண்ணையொன்றில் முதலாவதாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பின்னர் சில இடங்களுக்கு பரவியதாகவும் இந்த நோய் காரணமாக கொட்டுக்கச்சி பண்ணையில் சுமார் 45000 லீட்டர் பால் 10000 லிட்ட்டர் பாலாக குறைவடைந்ததாகவும் சுட்டிக் காட்டப்பட்டது.
இந்த நோய்க்கு நாட்டு வைத்தியர்களால் பெருங்காயம் பரிந்துரைக்கப்பட்ட போது பெருமனதோடு சில மிருக வைத்தியர்கள் பண்ணையாளர்களுக்கு இதை அறிமுகப்படுத்தியதற்கு அமைச்சரால் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தினால் வேறு ஒரு நோய் ஏற்பட வாய்ப்பிருப்பதால் நியூசிலாந்திலிருந்து மருந்து இறக்குமதி செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தோடம் பழம்
இலங்கையில் முதன் முதலாக வடமேல் மாகணத்தில் பச்சை நிற தோடம் பழத்தை மஞ்ஞல் நிறமாக மாற்றி விற்பனை செய்யவதற்காக தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வகை உறை பயன்படுத்தப்படுகிறது. இது மனிதனுக்கு கேடு தரும் இரசாயனப் பதார்த்தம் சேர்க்கப்படாததாகும்.
மிளகாய்
இலங்கையின் பச்சை மிளகாய் உற்பத்தியில் 60 வீதத்தை வடமேல் மாகாணம் பெற்றிருப்பதாகவும் காய்ந்த மிளகாயில் 2 வீதமே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அதற்கான காரணம் இந்தியாவின் வத்தல் விலை குறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டது. 2675 ஹேக்டயாரில் 6020 மெட்றிக்டொன் 2013 ம் ஆண்டில் பயிரிடப்பட்டுள்ளது. இந்தியா தனது விவசாய நடவடிக்கைகளுக்கு டீடீடி மலத்தீன் பாவிப்பதாகவும் பரவிவரும் சிறுநீரக (கிட்னி) நோய்க்கு பசளைகள் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வெங்காயம்
வடமேல் மாகாணத்திலிருந்து நாட்டின் உற்பத்திக்கு சின்ன வெங்காயம் 20 வீத பங்களிப்பு செய்யப்படுகிறது. 1690 ஹேக்டயாரில் 22392 மெற்றிக்டொன் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரிய வெங்கயம் தேசிய உற்பத்தியில் 0.56 வீத பங்களிப்பு மட்டுமே செலுத்துகிறது. வருடத்தில் மூன்று மாதங்கள் ஏற்படும் பெரிய வெங்காய தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த சிறிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மரக்கறி
டிசம்பர் முதல் ஜனவரி வரையும் மே முதல் ஜுன் வரையும் மரக்கறி வகைகளுக்கு அதிக கேள்வி இருப்பதால் நிரம்பலை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்ற 2013 ல் 107 விவசாயிகளுக்காக பயிற்சி பற்றறை நடாத்தப்பட்டுள்ளது. பெண்கள் விவசாயத்தில் ஈடுபட விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அர்களுக்கு புள்ளு வெட்டுவதற்காக விசேட இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

0 comments
Readers Comments