பிரதான செய்திகள் ,
இறைச்சிக் கடைகள் நாளை முதல் மூடப்படும்
Posted by
Puththelil
Published on
Monday, February 24, 2014
புத்தளம் நகரிலுள்ள இறைச்சிக் கடைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பப்படும். FOOT & MOUTH எனப்படும் ஒரு வகை நோய் தற்போது மாடுகளுக்கு பரவி வருவதால் இந்த நோயைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாடு, ஆடு மற்றும் பன்றி இறைச்சிக் கடைகளே மூடப்படவுள்ளன.
இது தொடர்பான கூட்டமொன்று இன்று புத்தளம் நகர சபையில் நகர சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது. மிருக வைத்தியர்கள், பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர், இறைச்சிக் கடை உரிமையாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்ட பின்பு மிருக வைத்திய அதிகாரிகளின் அறிக்கை பெறப்பட்ட பின்பு மீண்டும் இறைச்சிக் கடைகள் திறக்கப்படவுள்ளன.
0 comments
Readers Comments