தேசிய செய்திகள் ,
புத்தளம் மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம்
Posted by
Puththelil
Published on
Monday, February 24, 2014
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேற்று புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் மகிந்தோதய தொழில் நுட்ப ஆய்வு கூடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ திறந்து வைத்தார். பாத்திமா, ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரிகளுக்கான மகிந்தோதய தொழில் நுட்ப ஆய்வு கூட திறப்புகள் ஜனாதிபதியினால் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.
நவகத்தேகம மகா வித்தியாலயத்தில் மகிந்தோதய தொழில் நுட்ப ஆய்வு கூடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ திறந்து வைத்தார்.
வண்னத்தவில்லு இசுறு பாடசாலையில் புதிய கட்டடமொன்றினையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ திறந்து வைத்தார்.
புனர்நிர்மாணம் செய்யப்படட்ட பாலாவி கல்பிட்டி வீதி பொது மக்களின் பாவனைக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் கையளிக்கப்பட்டது.
சிலாபம் ஹெலம்பவடன ஸ்ரீ சத்தானந்த வித்யாலயத்தில் மகிந்தோதய தொழில் நுட்ப ஆய்வு கூடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ திறந்து வைத்தார்.
படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு























0 comments
Readers Comments