<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிராவில் மீலாதுன் நபி விழா

( Zahira Media Unit ) 

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் தலைமையில்  மீலாதுன் நபி விழா  விழா நிகழ்வுகள் இன்று காலை இடம் பெற்றன. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முன்னாள் செயலாளர் அஷ்ஷேஹ் எச். அப்துல் நாசர்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு விசேட உரையொன்றினை ஆற்றினார்.
 
 
 
 
 

இந்த நிகழ்வின் போது  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முன்னாள் செயலாளர் அஷ்ஷேஹ் எச். அப்துல் நாசருக்கு சமய,கல்வி,சமூக பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவதைப் பாராட்டி கௌரவித்து  ஸாஹிரா பாடசாலையினால்  நினைவுச் சின்னம்  வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 
காசிமிய்யா அரபுக் கல்லூரியில் பகுதி நேர ஹிப்ளு மத்ரசாவில் அல் குர்ஆனை மனனம் செய்த நான்காவது மாணவனான தரம் 7ல் கற்கும் எம்.எம். நபீஹ் பரிசளித்து  கௌரவிக்கப்பட்டார்.  


புத்தளம் ஒன்லைன் நடாத்திய புகைப்பட பயிற்சி நெறியில் கலந்து கொண்ட தரம் 11 வகுப்பு மாணவன் ஆர்.எம்.எம். சஜாத் இந்த நிகழ்வின் போது   கௌரவிக்கப்பட்டார்.  




0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors