<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிராவிற்கு ஒரு இலட்சம் ரூபா பரிசு

( Zahira Media Unit )
டோக்கியோ சீமெந்து கம்பனியின் அனுசரணையில் சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நாடளாவிய ரீதியில் நடாத்திய பாடசாலைகளின் புதிர் போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை புத்தளம் மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.  இதற்கான ஒரு இலட்சம் ரூபா பரிசு காசோலையை  டோக்கியோ சீமெந்து கம்பனி லங்கா பீ.எல்.சீ. பிரதேச வியாபார நிறைவேற்று அதிகாரி சானக வீரசேகர ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூபிடம் இன்று கையளித்தார்.

புதிர் போட்டி பொறுப்பாசிரியர்களான எஸ்.ஆர்.எம். முஹ்ஸி, டீ.ஏ.என்.எஸ். பாத்திமா, எச்.முஜீபா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2013  க.பொ.த. சாதாரண தர மாணவர்களான எம்.ஜே.எம். ஜப்ரான், எம்.எப்.எம். பாத்ஹி, எம். முஸ்தாக்,  டப்ளிவ்.எம். றிப்தி ஆகியோர்  புதிர் போட்டியில் கலந்து கொண்டனர்.


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors