<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் தள வைத்தியசாலைக்கு நோயாளர் அனுமதி முகப்பு நிலையம்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் தள  வைத்தியசாலையில்  நோயாளர் அனுமதி முகப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை புத்தளம் தள  வைத்தியசாலையில் இடம் பெற்றது. ஹோல்சிம் லங்கா லிமிடெட் நிறுவனம் இதற்காக 3.5 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

புத்தளம் தள  வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில்  வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.  வடமேல் மாகாண சுகாதார அமைச்சர்  டீ.பீ. ஹேரத் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ்,  வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டீ.எம். தாஹிர், எஸ்.எச்.எம். நியாஸ், சிந்தக மாயாதுன்ன, கிங்ஸ்லி லால், வடமேல் மாகாண சபை முன்னாள்  சுகாதார அமைச்சர் எம்.எச்.எம். நவவி,  ஹோல்சிம் லங்கா லிமிடெட் பிரதான நிறைவேற்று அதிகாரி பிலிப் ரிச்சர்ட் ஆகியோரும் அத்திகளாக கலந்து கொண்டனர்.
 
 

 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors