Feature விளையாட்டுச் செய்திகள் ,
ஹைபை ( HiFi ) அணி செம்பியன்
Posted by
Puththelil
Published on
Monday, December 9, 2013
(சயீட் பினோஸ்)
புத்தளத்தைச் சேர்ந்த நான்கு அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட "BEST OF FOUR" கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஹைபை ( HiFi ) அணி செம்பியன் ஆனது.
புத்தளத்தைச் சேர்ந்த நான்கு அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட "BEST OF FOUR" கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஹைபை ( HiFi ) அணி செம்பியன் ஆனது.
டிபன்டர்ஸ்
அணியினால் நடாத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியில் டேங்க் பஜார் (Tank
Bajar), Bப்லாஸ்டர்ஸ், டிபன்டர்ஸ் மற்றும் ஹைபை அணிகள் பங்குபற்றின.
புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற ஹைபை மற்றும் டேங்க்
பஜார் அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இப்போட்டி நேற்று இடம்பெற்றது.
முதலில்
துடுப்பெடுத்தாடிய ஹைபை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 175
ஓட்டங்களை பெற்றது. குமார் 85 ரன்களை குவித்தார். பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய டேங்க் பஜார் அணி 135 ரன்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
நஸ்பர் 57 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார். இதன் மூலம் ஹைபை அணி
44 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
சுற்றுப்போட்டியின் சிறந்த
துடுப்பொட்ட வீரர் விருதை ஹைபை அணியின் குமார் பெற்றுக்கொண்டார். சிறந்த
பந்துவீச்சாளருக்கான விருதை டேங்க் பஜாரின் தஸ்மீரும் சகலதுரை ஆட்டக்காரர்
விருதை டிப்ன்டர்ஸ் அணியின் ஜெஸீமும் பெற்றுக்கொண்டனர்.
![]() |
| ஹைபை அணி |
![]() |
| டேங்க் பஜார் அணி |
![]() |
| சிறந்த துடுப்பெடுத்தாட்ட வீரர் - குமார் |
![]() |
| சிறந்த பந்துவீச்சாளர் - தஸ்மீர் |
![]() |
| சகலதுரை ஆட்டக்காரர் - ஜெஸீம் |
![]() |






0 comments
Readers Comments