Feature பிரதான செய்திகள் ,
பொலிஸ் அத்தியட்சகரின் வாகன சராதி பிணையில் விடுதலை
Posted by
Puththelil
Published on
Monday, December 16, 2013
( ஜூட் சமந்த )
மதுரங்குளி கரிக்கட்டை பிரதேசத்தில் சனி இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட புத்தளம் பொலிஸ் தொகுதி பொலிஸ் அத்தியட்சகரின் வாகன சராதி கித்ஸிரி பெரேரா இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பதில் நீதவான் அப்துல் காதர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கித்ஸிரி பெரேராவை எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத்து .
புத்தளம் பொலிஸ் தொகுதி பொலிஸ் அத்தியட்சகர் முந்தல் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட பின் புத்தளம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த வேளை சிலாபம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று வீதியில் புரண்டு பொலிஸ் அத்தியட்சகரின் வாகனத்தில் மோதுண்டுள்ளது. இதனால் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்த சம்பவமொன்ன்று மதுரங்குளி கரிக்கட்டை பிரதேசத்தில் சனி இரவு இடம் பெற்றது. இந்த விபத்தில் புத்தளம் பொலிஸ் தொகுதி பொலிஸ் அத்தியட்சகரின் வாகன சராதி சந்தேகத்தின் பேரில் முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே வாகன சராதி இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

0 comments
Readers Comments