<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

கொழும்பு - யாழ் பஸ் ஒன்று தீயினால் எரிந்து முற்றாக சேதம்

( ஜுட் சமந்த )
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த அதி சொகுசு பஸ் ஒன்று நேற்று இரவு 11.30 மணியளவில் தீப் பிடித்ததனால் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த சம்பவம் மாதம்பை - கலஹிட்டியாவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.  11.30 மணியளவில் எரிய ஆரம்பித்த இந்த பஸ் அதிகாலை 1.00மணி வரை எரிந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு 9.15 மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இந்த பஸ் தனது பிரயாணத்தை ஆரம்பித்துள்ளது. மாதம்பை பிரதேசத்தில் பஸ் சென்றுகொண்டிருந்த சமயம் பஸ்ஸின் முன்னாலுள்ள டயர் வெடித்ததைத் தொடர்ந்து பஸ் தீப் பற்ற ஆரம்பித்ததாக தெரிய வருகின்றது. அந்த சந்தர்ப்பத்தில் பஸ்ஸினுள் 27 பயணிகள் இருந்துள்ளனர். ஆனால் பயணிகளுக்கோ அவர்களது பொதிகளுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை. தீப்பிடிக்க ஆரம்பித்தவுடன் பயணிகளும் பொதிகளும் பாதுகாப்பான முறையில் பஸ்ஸிலிருந்து  இறக்கப்பட்டுள்ளனர்.

தீ எரிந்து முடியும் வரை தீயை அணைப்பதற்கான எந்த விதமான வசதிகளும் அவ்விடத்தில் இருக்கவில்லை என்று தெரிய வருகிறது. அதே வேளை குறித்த நேரத்தில் சிலாபம் - கொழும்பு வீதியின் போக்குவரத்துக்கு வேறு பாதைகளை பயன்படுத்தும் நடவடிக்கைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டனர்.


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors